"ஈரோடு புத்தகத் திருவிழா 2010'

[2010-chennai-book-fair-09.jpg] "ஈரோடு புத்தகத் திருவிழா 2010' ஈரோடு வ.உ.சி. பூங்காவில் ஜூலை 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.


 மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் இந்தத் திருவிழா தினசரி 
காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை உண்டு.


 இது குறித்து அந்தப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறியிருப்பது:


 புத்தகத் திருவிழாவில் கிடைப்பதற்கரிய புத்தகங்கள் கிடைக்கும். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை தினசரி நடைபெறும்.


மேலும் விவரங்களுக்கு  www.erode​bookfestiv​al.com​  என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.


 புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஈ.ரோடு வ.உ.சி. பூங்காவில் (பஸ் நிலையம் அருகில்) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.


 இதில் அரசு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பொது நூலகத் துறை இயக்குநர் க. அறிவொளி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.


 ஈரோடு மேயர் கே. குமார் முருகேஸ், துணை மேயர் பா. வெங்கடாசலம், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன், ஐ. மாயாண்டிபாரதி, கி.லட்சுமிகாந்தன் பாரதி, ஈரோடு கட்டுனர் கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.பெரியசாமி, டி.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சி. தேவராஜன், பி.ஏ.பி.ஏ.சி.ஐ. செயலர் ராம.லெட்சுமணன், தமிழ், ஆங்கில புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்' என்று கூறியுள்ளார்.

 

0 comments: