ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் மூலிகை விவசாய கருத்தரங்கம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில், வரும் 30ம் தேதி இலவச மூலிகை விவசாய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது.ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி இயக்குனர் பிரேமா, செயலாளர் கஸ்தூரிரங்கன், முதல்வர் சுப்ரமணியன் வெளியிட்டசெய்திக்குறிப்பு:சித்த, ஆயுர்வேத மருத்துவ முறை இந்திய மருத்துவ அறிவியல் களஞ்சியமாக திகழ்கின்றன. நவீன மருத்துவம், சில நோய்க்கு செயற்கை மருந்து கண்டறியவில்லை. கண்டறிந்த மருந்துகளால் பக்கவிளைவு ஏற்படுகின்றன.பக்க விளைவின்றி நோய் குணப்படுத்த, உலக அளவிலான பார்வை தற்போது இந்தியாவின் மூலிகை மருந்தியலான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் பக்கம் திரும்பியுள்ளது.மூலிகை மருந்து சாகுபடியினால் விவசாயிகள் பயனடைய வேண்டும். மரபு சார்ந்த விவசாய உற்பத்தி பொருட்களோடு, மூலிகை உற்பத்தியும் செய்தால் அவர்கள் வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.கல்லூரியின் மூலிகை அறிவியல் துறை சார்பில், கிராமந்தோறும் விவசாயக் கருத்தரங்கு, கல்லூரியில் சிறப்பு செயல்முறை விளக்க வகுப்பு நடத்தி, மூலிகை விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வரும் 30ம் தேதி, இலவச மூலிகை விவசாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. அதில், இன்சுலின் செடி, கதிர்ப்பச்சை போன்ற மூலிகை வளர்ப்பு, தரம், விற்பனை வாய்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.செலவில்லா விவசாயம் செய்ய ஜீவாமிருதம், பீஜாம்ருதம், பஞ்சகவ்யா, ஆட்டுவூட்டம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.இவ்வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயனடைய வேண்டும். விபரங்களுக்கு 98431-92321, 99440-06301 ஆகிய மொபைல்ஃபோன் எண்களை தொடர்புக் கொள்ளலாம்.

 

0 comments: