இண்டர்நெட்டில் டியூஷன்: எட்சர்வ் நிறுவனம் அறிமுகம்

சென்னை, ஜூலை 29: சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் எட்சர்வ் கல்வி நிறுவனம், இன்டர்நெட் மூலம் மாணவர்களுக்கு நேரடி டியூஷன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.


சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில் பயிலும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருவரையொருவர் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையிலான "இரு வழி உரையாடல் முறை' இந்த பயிற்சியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள்,  www.lampsglow.comஎன்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த மேலும் விவரங்களை அறிய 95661 78844 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்

 

0 comments: