நம்பிக்கை, விடாமுயற்சி : அவசியம்ஐ.ஏ.எஸ்., தேர்வு ஆலோசனை கூட்டத்தில் டிப்ஸ்

திருச்சி: ""முதல்முறை தேர்வெழுதி வெற்றியடைய, தேர்வு குறித்த தெளிவான பார்வை வேண்டும். ஆசை, நம்பிக்கை, விடாமுயற்சியே மிக அவசியம்,'' என்று ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.திருச்சி "டிரேஸ்' சார்பில், ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் மாணவருக்கான கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "டிரேஸ்' மைய அமைப்பாளரும், வேலைவாய்ப்புத் துறை திருச்சி மண்டல துணை இயக்குனருமான சுரேஷ்குமார் வரவேற்றார்.கடந்தாண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 12வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்ற, திருச்சியை சேர்ந்த லலிதா மற்றும் விமலா, சண்முகப்பிரியா, சிவக்குமார், நிவாஸ், சபிருல்லா, பிரசன்னா, ராமசாமி, ஹரி பிரசாத், சிவசுப்ரமணியன் பங்கேற்றனர்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றியடைந்தவர்கள் வழங்கிய ஆலோசனை:கோச்சிங் சென்டருக்கு சென்றால்தான் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிப் பெறுவோம் என்பதில்லை. வழிகாட்டுதல் மிகவும் அவசியம். தேர்வில் ஜெயிப்போம் என்ற தன்னம்பிக்கை மிக முக்கியம்.புத்தகத்தை படித்தால் மட்டுமே தேர்வில் ஜெயித்துவிட முடியாது. சமுதாயத்தை கற்றுக் கொள்ளவேண்டும். பஜ்ஜி மடிக்கும் பேப்பர் என்று நினைக்காமல், அதையும் படித்தால், அது தேர்வுக் கேள்விக்கான ஒரு விடையை எழுத பயன்படும்.முதல்முறை தேர்வெழுதி வெற்றியடைய, தேர்வு குறித்த தெளிவான பார்வை வேண்டும். ஆசை, நம்பிக்கை, விடாமுயற்சி மிக அவசியம். 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை முழுமையாக படித்தாலே தேர்விற்கு தயாராகிவிடலாம்.




எத்தனை மணி நேரம், எந்த நேரத்தில் படிப்பது என்பதை மற்றவர்களை சொல்வதை பின்பற்றுவதை விட உங்களுக்கு பிடித்த வேளையில், படிக்கும் நேரக் கணக்கை அமைத்து கொள்வது சிறந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாணவர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தனர்.


 

0 comments: