பக்தவத்சலம் கல்லூரியில் புதிய மாணவிகளுக்கு வரவேற்பு

சென்னை, ஜூலை 30: சென்னை கொரட்டூர் பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் லூகாஸ் டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியில் கல்வியின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி தாளாளர் மரகதவல்லி, செயலாளர் எஸ்.பி. ராஜகோபாலன், முதல்வர் கஸ்தூரிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

0 comments: