சர்வதேச பொறியியல் துறை கருத்தரங்கம்: கரூர் செட்டிநாடு கல்லூரியில் துவக்கம்

கரூர்: கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் "ஐசிசிசிஎன்டி-10' சர்வதேச கருத்தரங்கம் நேற்று துவங்கியது. மூன்று நாள் நடக்கும் கருத்தரங்கின் துவக்க விழாவில் கல்லூரி துணை தலைவர் முத்தையா தலைமை வகித்தார். அமெரிக்கா, ஸ்டேன்ஃபோர்டு பல்கலை பேராசிரியர் தோமஸ் ஹெச். லீ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கருத்தரங்கு குறித்து கல்லூரி முதல்வர் கபிலன் கூறியதாவது: உலகளவிலான கருத்தரங்கு கல்லூரிகளில் நடத்தப்படுவது குறைவு. நம்முடைய மாணவர், ஆசிரியர் தங்கள் திறனை உலகளவுக்கு நிரூபிக்க இத்தகைய கருத்தரங்கு தேவைப்படுகிறது. கருத்தரங்கு குறித்து ஒருநாள் பயிற்சியரங்கு கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து தலைப்புகளில் ஏற்கனவே நடத்தப்பட்டது. தற்போது நடக்கும் கருத்தரங்கு முடிந்த பிறகும், சிறப்பு விருந்தினராக வந்துள்ள பேராசிரியர்களுடன் மாணவர், ஆசிரியர் தொடர்பு இருக்கும். இரண்டாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இத்தகைய கருத்தரங்கு வரும் ஆண்டிலும் தொடரும். இந்திய அறிவியல் அறிஞர்களும், உலகளவில் திறன் நிரூபிக்க வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு.

மூன்று நாள் நடக்கும் கருத்தரங்கில் தேசியளவில் 621 பேர் தங்கள் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வறிக்கை சர்ப்பித்தனர். அறிக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 200 ஆய்வு தேர் வு செய்யப்பட உள்ளது. 30 அமர்வில் 250 ஆய்வு சமர்ப்பிக்கப்படுகிறது. "வீடியோ கான்ஃபரன்ஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட "இன்டர்நேஷனல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அசோசியேஷன்' சார்பில், நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் தேர்வாகும் ஆய்வு கட்டுரை, அவர்களுடைய இதழில் வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சியாளருக்கு இது ஒரு முக்கிய அங்கீகாரம். இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து கேம்பிரட்ஜ் பல்கலை பேராசிரியர் டேப்பிங் சு, அமெரிக்க லூசியானா பல்கலை இயக்குனர் சீத்தாராம ஐயங்கார், நார்த் டெக்ஸாஸ் பல்கலை பேராசிரியர் பில் பி. பக்ள்ஸ், பேராசிரியர் காமேஷ் நமூதுரி, பேராசிரியர் ஸியாஹி யுவான், ஓர்கான் பல்கலைக்கழகம் பேராசிரியர் பெல்லா போஸ் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

 

0 comments: