இளவட்டம் திருவிழா: 1 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு


சென்னை,ஆக.24: எய்ட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இளவட்டம் திருவிழா, சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கு.விஜயலெட்சுமி  சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு, இளவட்டம் திருவிழா என பெயரிட்டு அதில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், எய்ட்ஸ் குறித்த நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தியது.
ஆனால் இளவட்டம் திருவிழா குறித்து சிலர் தவறாகப் பேசி வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.  
இவ்வாறு தவறான கருத்தை பரப்புவதால், இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அவர்கள் சார்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கும், பெற்றோர்களுக்கும் தவறான எண்ணம் எழும் என்றார் அவர்

 

0 comments: