திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு குமாரராஜா முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு

சென்னை, ஆக. 30: திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு, குமாரராஜா மு.அ.மு. முத்தையா செட்டியாரின் 82-வது பிறந்தநாள் நினைவுப் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் சென்னையில் (அண்ணா மேம்பாலம் அருகே) ராணி சீதை மன்றத்தில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், இந்த ஆண்டுக்கான பரிசை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் வழங்க உள்ளார்.
÷மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகப் பணியாற்றுவதற்காக திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தில் இயங்கி வரும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக் கூடத்துக்கு இந்தப் பரிசு வழங்கப்பட உள்ளது.
காது கேளாத, வாய் பேச இயலாத மாணவர்களுக்காக இலவசமாக நடத்தப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் கே. முருகசாமி இநதப் பரிசைப் பெறுகிறார். 1989 முதல் 1992 வரை தேசிய கால்பந்தாட்ட வீரராக விளங்கிய இவரும் காது கேளாத, வாய் பேச இயலாதவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் பள்ளியில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு திருப்பூரில் இயங்கும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
இந்த விழாவில், அறக்கட்டளை சார்பில் 10 பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
பேராசிரியர் மு. இராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், அறக்கட்டளையின் புரவலருமான டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி, அறக்கட்டளையின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அறக்கட்டளையின் கெüரவ செயலர் ஆறு. ராமசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றன

 

0 comments: