கல்வி தீர்ப்பாய மசோதா நிறைவேறியது

புது தில்லி, ஆக. 26: கல்வி தீர்ப்பாய மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. இதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அளவிலும், தேசிய அளவிலும் தீர்ப்பாயம் அமைக்கப்படும். உயர்கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் தொடர்பாக பிரச்னைகள் எழும்போது சம்பந்தப்பட்ட மாநில தீர்ப்பாயத்தில் தீர்வு காணப்படும்.

2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்புடைய உயர்கல்வி நிறுவனங்களில் பிரச்னைகள் எழும்போது தேசிய தீர்ப்பாயத்தில் தீர்வு காணப்படும் என இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்

 

0 comments: