திருமண வரவேற்பில் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் பரிசு

சென்னை, ஆக. 30: சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளிலும், வரவேற்பு விழாக்களிலும் கலந்து கொண்டவர்களுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு ஆகியவையே வழங்கப்படும். தமிழக கலாசாரத்தில் பரம்பரை, பரம்பரையாக தொடர்ந்து வரும் பழக்கங்களில் இதுவும் ஒன்று.
ஆனால், காந்தியின் சுயசரிதை புத்தங்களை வழங்கி, அதைப் பெற்றவர்களை மட்டுமல்லாமல் அதைப் பற்றி கேள்விப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பெ. வடிவேல். இவரது மனைவி பத்மா.
இவர்களது மகள் அனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்தான் தேசியத்தின் மணம் வீசியது.
இது குறித்து மணமகளின் தந்தை பெ. வடிவேல் கூறியதாவது:
இப்போது இருக்கும் சிறுவர், சிறுமிகள் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இந்த புதிய முயற்சி. தேங்காய், பழங்கள் ஆகியவை ஒரு நாள் பயன்பாட்டோடு முடிந்துவிடும்.
ஆனால், பல காலமாக இந்த புத்தகங்கள் அவர்கள் வீட்டில் இருக்கும். அனைவருக்கும் தேசப் பிதாவை பற்றியும், விடுதலை போராட்டத்தை பற்றியும் தெரியவரும் என்றார் அவர்.
மேடைகளில் மட்டுமே காந்தியை பற்றி பேசுவதை காட்டிலும், இது போன்ற புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது காந்திய சிந்தனைகளை மக்களிடையே பரவச்செய்யும் என்பதில் ஐயமில்லை

 

1 comments:

thiru said...

ஏதோ விந்தை யான செய்தியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
திருமணங்களில் நூல்களை த் தாம்பூலப் பைக்கு மாற்றாக அன்பளிப்பாக வழங்குதல் புதிதாக அச்சிட்ட நூல்களை வழங்குதல் என்பன 60 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்கத்தால் நடை முறைப் படுத்தப்பட்டுத்
தமிழ் இயக்கங்களால் பரவலாக்கப்பபட்டவை தான்.

ஒன்றைப் ப்ற்றிக் கூறு்ம் பொழுது அதன் முன் வரலாறு தெ ரியாமல் எழுதி நம் அறியாமையை வெளிப்படுத்தக் கூடாது.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்