இளையோர் ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் ஷிவ தபா

சிங்கப்பூர், ஆக.25: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷிவ தபா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த ரமிரேஸ் அலாயிடம் தோற்று தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் தபா.
முன்னதாக, கடந்த மே மாதம் அஸர்பைஜான் நாட்டில் நடந்த உலக ஜூனியர் குத்துச்சண்டை போட்டியிலும் ரமிரேஸிடம், தபா தோற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பதக்கத்துடன் சேர்த்து மொத்தம் 6 வெள்ளி, 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்தியா

 

0 comments: