"திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம்'

கோவை: "ஆண்டு தோறும் வெளிவரும் இரண்டு லட்சம் இன்ஜி., மாணவர்களில் திறமையுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது' என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கணியூர், பார்க் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு இன்ஜி., மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் நெறிகாட்டும் விழா நடந்தது. மக்கள் தொடர்பு அலுவலர் முருகேச பாண்டியன் வரவேற்றார். கல்லூரி தலைவர் டாக்டர் ரவி தலைமை வகித்து பேசுகையில், ""மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், கடின உழைப்புடன் இருக்க வேண்டும். நவீன உலகில் தகவல் தொடர்பு குறித்த அறிவு, நுண்ணறியும் திறன், காலம் தவறாமை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியனவும் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவசியம். இந்த குணநலன்களுடன் இருந்தால் சாமானியர்களும் சாதனையாளராகலாம்,'' என்றார்.
கல்லூரி முதன்மை செயல் அலுவலர் அனுஷா பேசுகையில், ""தமிழகத்தில் உள்ள 400 இன்ஜி., கல்லூரிகளிலிருந்து ஆண்டு தோறும் இரண்டு லட்சம் இன்ஜி., பட்டதாரிகள் வெளிவருகின்றனர். திறமை வாய்ந்தவர்களுக்கு உடனடியாகவும், உயர்வாகவும் பதவிகள் கிடைக்கின்றன. திறமையை வளர்த்துக் கொள்வது மாணவர்களை பொறுத்ததே,'' என்றார்
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மோகன்குமார், ஆலோசகர் வள்ளி நாயகம் மற்றும் துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

 

0 comments: