சென்னையில் மாரத்தான்: சந்தோஷ் முதலிடம்:பெண்களில் சந்திரா முந்தினார்

சென்னை:மார்க் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் சென்னையில் நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., பரிசு வழங்கினார்.மார்க், தமிழ் மையம் சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. தேசிய அளவில், மாநில அளவில் 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.சென்னை அண்ணா சதுக்கம் முன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். 21 கி.மீ., தூரம் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை, தி.மு.க., எம்.பி., கனிமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், அமைச்சர்கள் மைதீன் கான், பூங்கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் 21 கி.மீ., தூரம் ஓட்டப்பந்தயம் ஆண், பெண் என இரு பாலருக்கும் நடத்தப்பட்டது. சென்னை மக்கள் ஓட்டம் என்ற பெயரில் 7 கி.மீ., தூரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 500 மீட்டர் தூரத்திற்கு வீல் சேர் ஓட்டும் போட்டியும் ஆண், பெண் என இரு பாலருக்கும் நடத்தப்பட்டது.தேசிய அளவில் 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் முதலிடத்தையும், அரியானாவைச் சேர்ந்த சுனில்குமார் இரண்டாம் இடத்தையும், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவில் பம்பா சந்திரா முதலிடத்தையும், பிரீத்தி ராவ் இரண்டாம் இடத்தையும், ரேமேஷ்வரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மாநில அளவில் நடந்த 21 கி.மீ., தூரத்திற்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் நாகேந்திர ராவ் முதலிடத்தையும், திலக் இரண்டாம் இடத்தையும், ராஜேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.பெண்கள் பிரிவில் சுதா முதலிடத்தையும், பத்மாவதி இரண்டாம் இடத்தையும், சாந்தி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட வீல் சேர் போட்டியில் ஆண்கள் பிரிவில் சீனிவாசன் முதலிடத்தையும், மாரியப்பன் இரண்டாம் இடத்தையும், மோகன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.பெண்கள் பிரிவில் தீபிகா முதலிடத்தையும், தேவகி இரண்டாம் இடத்தையும், அனுராதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி., அகிலா சீனிவாசன், மார்க் ரெட்டி ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில் கனிமொழி பேசுகையில், "கிவ்லைப்' என்ற அமைப்பில் உள்ள 8 ஆயிரம் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையிலும், அவர்களின் வாழ்க்கை மாற்றி அமைக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி மூலக்காரணமாக அமைந்துள்ளது' என்றார்.


 

0 comments: