சீனாவுக்கு செல்லும் இந்திய மருத்துவ மாணவர்கள்

பெரும்பாலான மாணவர்களின் எதிர்கால கனவு டாக்டராக பணியாற்றுவது. இந்தியாவில் எம்.பி.எஸ்.எஸ்., படிப்புக்கான கால அளவு நான்கரை வருடம்
china medical univrsity
பின் ஒரு வருடம் கட்டாயம் பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும்.
இந்தியாவில் இந்த கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் பெரும்பாலும் முடிந்து விட்டது. இங்கு இடம் கிடைக்காததால் பலர், வெளி நாட்டிலாவது தங்களது கனவான எம்.பி.பி.எஸ்., படிப்பை படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதனால் மருத்துவ படிப்புக்காக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. குறிப்பாக பழைய சோவியத்
யூனியன் நாடுகள் மற்றும் சீனாவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பு நல்ல சர்வதேச தரத்துடன், குறைந்த செலவுடனும், ஆங்கில மொழியிலேயே வழங்கப்படுகிறது. படிப்புக் கான கால அளவு 5 ஆண்டுகள். விடுதி வசதியும் 3 ஸ்டார் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிப்பதற்கு குறைந்தது 30 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால்
சீனாவில் ஒரு வருடத்துக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே செலவாகும். ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளில் 1.75 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை செலவாகும்.

சீனாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்து விட்டு "ஒரு வருடம் கட்டாயம் பயிற்சி டாக்டராக பணியாற்றுதல்' இந்தியாவில் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எம்.சி.ஐ., யும் அனுமதி அளித்துள்ளது. மேற்கண்ட காரணங்களினால் சீனாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

வெளிநாடுகளில் 2002ம் ஆண்டுக்கு பின் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) நடத்தும்
தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவில் இவர்களது படிப்பு அங்கீகரிக்கப்படும் என்பது முக்கியமானது.

எம்.சி.ஐ., யால் அங்கீகரிக்கப்பட்ட சீன மருத்துவ கல்லூரிகளின் விவரங்களைwww.mciindia.org/tools/prelease/eligibility.htm என்ற இணைய தளத்திலும், ரஷ்யா மற்றும் இதர நாடுகளின் கல்லூரிகளை தெரிந்து கொள்ள www.mciindia.org/know/acts/schedule3.htm என்ற இணைய தளத்தையும் பாருங்கள்.

 

0 comments: