சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி : 3200 மாணவர்களுக்கு வாய்ப்பு

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள பசுமைப்படையை சேர்ந்த மாணவ, மாணவிகள் 3,200 பேருக்கு வனத்துறை மூலம் சுற்றுசூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் மாவட்டம் தோறும், சுற்று சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் பசுமைப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பத்து பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு 10 மாணவ, மாணவி வீதம் 100 பேருக்கு அந்தந்த மாவட்ட வனவியல் விரிவாக்க மையத்தில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பள்ளியில் உள்ள ஆசிரிய சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனங்களில் முக்கியத்துவம், கடல் வளம், சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு, வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் மதுரையில் செப்., 27 லும், செப்., 20 ல் தேனி, செப்., 22 ல் திண்டுக்கல்லிலும், செப்., 29 ல் ராமநாதபுரம், செப்.,28 சிவகங்கையிலும், அக்.,11 விருதுநகர் மாவட்டத்திலும் வழங்கப்படவுள்ளது. செப்., 20 ல் துவங்கும் பயிற்சி 32 மாவட்டங்களிலும் நவ., 25 ம்தேதி வரை வழங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 3,200 மாணவ, மாணவிகளுக்கும், 320 சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுற்று சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் செய்து தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

0 comments: