மரபு சார் அறிவியல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை

சென்னை, ஆக. 28: தற்கால சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய மரபு சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து மன்றத்தின் உறுப்பினர் செயலர் ச. வின்சென்ட் கூறியது:
மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்கள் என்பது குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூகத்தினரால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைவதோடு, வேலை வாய்ப்புகளும் பெருகும்.
இதற்காக இத் துறையில் உள்ள வல்லுநர்கள், நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் மரபுசார் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தரத்தை உயர்த்தவும், உற்பத்தியை பெருக்கவும் முடியும். இந்தத் திட்டத்துக்காக 2010-11-ம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சமும், 2011-12-ம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சமும், 2012-13-ம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சமும் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.

 

0 comments: