அக்னி -5 ஏவுகணை விரைவில் சோதனை

""அக்னி-5 ஏவுகணை சோதனை விரைவில் நடைபெறும்,'' என ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கண்டம் விட்டு கண்டம் சென்று, நிர்ணயித்த இலக்கை தாக்கக் கூடிய, 1.5 டன் எடை கொண்ட அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை சோதனை விரைவில் நடைபெறும். 5,000 முதல் 6,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய, இந்த ஏவுகணையை சாலை மார்க்கமாக கொண்டு சென்று தாக்குதல் நடத்த முடியும். ஏவுகணையின் சோதனை எந்த நாளில் நடைபெறும் என்பதை தற்போதைக்கு தெரிவிக்க முடியாது.

இந்தியாவுக்கு சில நாடுகள் ஏவுகணை தொழில்நுட்பத்தை தர மறுத்த நிலையிலும்,  இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளோம். அவர்கள் தொழில்நுட்பத்தை தர மறுத்ததால், நாம் இந்த நீண்ட தூர ஏவுகணையை உருவாக்க முடிந்தது.  ஏற்கனவே 3,500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியுள்ளது. இவ்வாறு அந்தோணி கூறினார்.

 

0 comments: