வாள் சண்டை: சென்னை, நாமக்கல் அணிகள் சாம்பியன்

திருப்பூர், ஆக.24: திருப்பூரில் நடைபெற்ற மாநில வாள் சண்டை போட்டியில் சென்னை, நாமக்கல் அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.
இப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 24 வீரர், வீராங்கனைகள் தேசியப்  போட்டியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநில வாள்வீச்சுக் கழகம் மற்றும் திருப்பூர் மாவட்ட வாள்வீச்சுக் கழகம் சார்பில் 17வயதுக்கு உட்பட்டோருக்கான 8வது மாநில அளவிலான வாள் சண்டை போட்டிகள் திருப்பூரில் கடந்த சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 275 மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். எபி, சேபர், ஃபாயில் ஆகிய 3 பிரிவுகளிலும் தனிநபர், குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இறுதிப்போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதில், மாணவர்கள் பிரிவில் சென்னை அணியும், மாணவிகள் பிரிவில் நாமக்கல் செல்வம் ஸ்போர்ட்ஸ் அணியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன.
தொடர்ந்து, மாணவர்கள் பிரிவில் 2ம் இடத்தை மதுரை அணியும், மாணவிகள் பிரிவில் சென்னை, மதுரை, நாமக்கல் அணிகளும் வென்றன. இந்த 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி தேர்வுபெற்ற 12 மாணவர்கள், 12 மாணவிகள் செப்டம்பர் 12 முதல் 15ம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு வாள்வீச்சுக் கழகத் தலைவரும், சேலம் மாவட்ட எஸ்பியுமான ஏ.ஜான்நிக்கல்சன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்

 

0 comments: