3ஜி சேவையால் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு பெருகும்

டில்லி : 3ஜி சேவையினால் மின்னணு வர்த்தகம் (இ காமர்ஸ்) பன்மடங்கு பெருகும் என இ பே- ஆன்லைன் வர்த்தக இணையதளத்தின் தலைவர் ஜான்தானாஹியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் மொபைல் போன்களில் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையினால் இ காமர்ஸ் எனும் மின்னணு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் பன்மடங்கு உயரும் என கூறப்படுகிறது. இது குறித்து இபே அமைப்பின் தலைவர் ஜோனாத்தன் ஹியோ பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், நாட்டின் பெரும்பாலானோர் ஆன்லைன் வர்த்தகத்தினை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொடக்கத்தில் 30 சதவீதமாக இருந்த ஆன்லைன் வர்த்தகம், தற்போது 60 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இந்தியாவில் 2.5 மில்லியன் இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தகத்தினை பயன்படுத்துகின்றனர். தற்பாது இ-பே அமைப்பின் மூலம் உற்பத்தி பொருட்கள் வாங்குவது, விற்பது உள்ளிட்ட வர்த்தகம் மூலம் 12,800 விற்பனையாளர்கள் உள்ளனர். இதன் மூலம் ரூ. 150 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும் இந்தியாவில் 3ஜி மொபைல் சேவை அதிகமானல் ஆன்லைன் வர்த்தமும் பெருகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

0 comments: