இ-டிரெய்னிங் அளிக்க எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்


சென்னை: மாணவர்களுக்கு இ-டிரெய்னிங் அளிப்பதற்கு எட்சர்வ், கனடா நிறுவனத்துடன் இணைகிறது.

கனடா நிறுவனமான கோரல் கார்ப்பரேஷனுடன், கூட்டாண்மை உடன்படிக்கையில், எட்சர்வ் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், கோரல் தொழில்நுட்பம், கிராபிக் டிசைன் மற்றும் டி.டி.பி., ஆகியவற்றில், இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

தலைவர் கிரிதரன் கூறியதாவது: எங்களை கோரல் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே ஆன்-லைன் டிரெய்னிங் பார்ட்னராக நியமித்துள்ளது. இ-டிரெய்னிங் துறையில் எங்களுக்குள்ள வலுவான திறனையும், நிபுணத்துவத்தையும் இது காண்பிக்கிறது. உலக அளவில் முன்னணி நிறுவனமான கோரல் உடனான ஒப்பந்தம், இந்தியாவின் இ-டிரெய்னிங் துறையில் எங்களை முதன்மை நிலைக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு கிரிதரன் கூறினார்.

 

0 comments: