கல்விக் கடனுக்கு சரியான வழிகாட்டுதல் முறைகளை தெரிவிக்க வேண்டும்: ஆட்சியர்


விழுப்புரம்,    வங்கியாளர்கள் கல்விக் கடன் வழங்குவதில் சரியான வழிகாட்டுதல் முறைகளை தெரிவித்திட வேண்டும் என்று வங்கியாளர் நிலைக் குழுக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்தார்.
÷விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் பேசியது:
÷மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 352 கிராமங்கள் கண்டறியப்பட்டு வங்கி சேவைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 506 சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் பொருளாதார கடன் உதவித் தொகையாக  ரூ.2,301 கோடி வழங்கப்பட்டுள்ளது.
÷இதில்  ரூ.520 கோடி மானியம் ஆகும். 4,500 குழுக்களுக்கு சுழல்நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 4,783 குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டுள்ளது.
÷விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2010-11 நிதியாண்டில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை  ரூ.23,587 லட்சம் பயிர் கடனாக 66,257 விவசாயிகளுக்கும், நகைக் கடனாக  ரூ.32,449 விவசாயிகளுக்கு  ரூ.12,918 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
÷கல்விக் கடன் வழங்குவதில் வங்கியாளர்கள் சரியான வழிமுறைகளை கடன் கேட்டு வருபவர்களுக்கு தெரிவித்திட வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு வங்கிக் கடன் மிகவும் உதவியாக இருக்கும். எனவே வங்கியாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
÷கூட்டத்தில் இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஜெயபால், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் உமாமகேஷ்வரராவ், முன்னோடி வங்கி மேலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

0 comments: