சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் சிறந்த கல்லூரியாக தேர்வு




சேலம், : சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, தமிழகத்தில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷தமிழகத்தில் உள்ள சுமார் 450 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்து | ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டின் சிறந்த கல்லூரி என்ற விருதை தமிழக அரசு, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை வழங்கி வருகின்றன.
÷அதன்படி 2008-09ம் ஆண்டுக்கான சிறந்த கல்லூரியாக, சேலம் ஜங்ஷன், மெயின் ரோடு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது.
÷அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சிறந்த கல்லூரிக்கான விருதை கல்லூரித் தலைவர் சொ.வள்ளியப்பா, முதல்வர் வீ.கார்த்திகேயன் ஆகியோரிடம் வழங்கினார்.
÷இதையடுத்து, விருது பெறுவதற்கு உழைத்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரித் தலைவர் வள்ளியப்பா, செயலர் தீரஜ்லால், முதல்வர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

 

0 comments: