இளைஞர்களின் வழிகாட்டி கலிங்கமலை!

ராணுவம், போலீஸ் என சேவை செய்யும் துறைகளில் சேர விரும்புவர்களுக்கு 9 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழிகாட்டியாக உள்ளார் மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டி கலிங்கமலை.

இந்த 42 வயதுக்காரர் 1995 முதல் 2000 வரை ராணுவத்தில் பணியாற்றியவர். பின் ஊர் திரும்பி, கவுன்சிலரான இவர், ராணுவம், போலீசில் சேர செட்டியார்பட்டி அரசு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் 2001 முதல் எழுத்து பயிற்சி, உடற்பயிற்சி அளிக்க துவங்கினார். இங்கு பயிற்சி பெறுபவர்களிடம் எந்த கட்டணமும் பெறுவதில்லை. தற்போது மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, தேனி,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என வெளி மாவட்ட இளைஞர்களும் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். ""இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி எடுத்ததில், 625 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இங்கிருந்து ராணுவம், கடற்படை, போலீஸ், எஸ்.ஐ., என பல துறைகளிலும் இளைஞர்கள் சென்று சேர்ந்து உள்ளனர்.   தற்போது 100 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு ஓட்ட பயிற்சி பெற சரியான டிராக் வசதி இல்லை. மேலும் கயிறு ஏறுவது உட்பட பல பயிற்சிகள் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்கு முறையான உபகரணங் கள் இல்லை. வெளியூர் இளைஞர்கள் தங்க இட வசதியில்லை. தற்போது நடந்த எஸ்.ஐ., எழுத்து பயிற்சி தேர்வில் என்னிடம் இருந்து சென்ற 75 இளைஞர்களில் 37 பேர் தேர்வு பெற்று ள்ளனர்,'' என்று கூறும் கலிங்கமலையிடம், இலவச பயிற்சி பெற விரும்பினாலோ, ஸ்பான்சர் செய்ய விரும்பினாலோ 91595 21288க்கு "கை' கொடுங்க.

 

0 comments: