45 நாளில் விபத்து காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை: மத்திய அரசு

சென்னை, ஆக. 25: விபத்து காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 45 நாளில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடர்பான கேள்வியை தி.மு.க. உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் எழுப்பினார். இதற்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் ரதன்ஜித் பிரதாப் நாராயண் சிங் அளித்த பதில்:
சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு 30 முதல் 45 நாள்களுக்குள் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மாவட்ட அளவில் அதிகாரமளிக்கப்பட்ட 600 நீதிமன்றங்களை அமைக்க சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு சாலைப் போக்குவரத்துத் துறையை நீதி மற்றும் சட்டத் துறை கேட்டுக் கொண்டது. இப்போதுள்ள சூழலில், இதற்கென தனியான திட்டமோ அல்லது நிதி ஒதுக்கீடோ துறையிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

0 comments: