பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் * தமிழக அரசு முடிவு

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய மருத்துவ திட்டத்தை அறிவிக்க உள்ளது.

இலவச கலர் "டிவி', முதல்வர் காப்பீட்டு திட்டம், முதல்வர் வீட்டு வசதி திட்டம் போன்ற பல திட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது. அரசின் அடுத்த திட்டம் மாணவர்களை மையமாக கொண்டு அறிவிக்கப்பட உள்ளது.மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் புதிய திட்டம் அமையும். இதயம், கண் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ஏற்கனவே சிகிச்சை தரப்படுகிறது. இத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதயம், கண் குறைபாடு, பற்களில் குறைபாடு, கேட்கும் திறன் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர் அடையாளம் காணப்படுவர். தேவைக்கேற்ப ஆபரேஷன் அரசு சார்பில் இலவசமாக செய்யப்படும்.

விவரம் சேகரிப்பு: கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் விவரம், சிகிச்சை பெற்ற விதம் போன்ற விவரங்களையும், முகாமிற்கு தேவையான டாக்டர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் போன்ற விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. விரைவில் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமென கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

0 comments: