மருத்துவ கல்வி கட்டணம் உ.பி.,யில் இரு மடங்கு உயர்வு

லக்னோ : உத்தரபிரதேசத்தில் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மருத்துவ கல்லூரிகளில், கடந்த 9 ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. இதையடுத்து அரசு இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கட்டணம் இதுவரை ஆண்டுக்கு 18 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 36 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதி கட்டணம் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 19 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம் படிப்பு படிப்பவர்களுக்கான கட்டணம் 42 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி முதுநிலை படிப்பு கட்டணம் 24 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு விடுதி கட்டணம் இலவசம் என்றாலும், மின் செலவுக்காக அவர்களிடமிருந்து மாதம் இனி 500 ரூபாய் வசூலிக்கப்படும். இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: