மாணவ, மாணவிகளுக்கான பேண்டு வாத்திய இசை போட்டி



கோவை, : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேண்டு வாத்திய இசை போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
 இது குறித்து போட்டி அமைப்பாளர் ஓ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 கோவை ரோட்டரி சங்கம், கோவை மாவட்ட தடகள மற்றும் விளையாட்டு நலச் சங்கம் ஆகியன சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான பேண்டு வாத்திய இசைப் போட்டி கிக்கானி மேனிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.   இப் போட்டியில் 20 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். முதலிடம் பெறும் பள்ளிக்கு ரொக்கப் பரிசாக | 1,000, சுழற்கோப்பைகள் வழங்கப்படும்.
  சீருடை மற்றும் பொதுச்சுற்று, மெதுவான அணிவகுப்பு, முக்கிய விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்துதல், விரைவான அணிவகுப்பு, 2 நிமிடங்களில் ஏதாவது ஒரு வடிவம் செய்தல், 3 நிமிடங்களில் பாடல் வாசித்தல் ஆகிய போட்டிகள் மூலம் சிறந்த மூன்று பள்ளி அணியினர் தேர்வு செய்யப்படுவார்கள்.  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் பரிசு வழங்குகிறார். இப் போட்டி குறித்து கூடுதல் விவரம் அறிய 94430 59837 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்

 

0 comments: