டிசம்பர் 11 மதுரையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்

மதுரை, ஆக. 24: மதுரையில் சங்க இலக்கிய ஆய்வு மையம் சார்பில் பரிபாடல் மற்றும் பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், டிசம்பர் 11-ம் தேதி பாத்திமா கல்லூரியில் நடைபெறுகிறது.
 இந்தக் கருத்தரங்குக்கு செம்மொழி இலங்கியங்களான பரிபாடல் மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய இரு நூல்களிலிருந்தும் ஆய்வுக் கட்டுரைகளை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் அனுப்பலாம் என சங்க இலக்கிய ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து மதுரை சங்க இலக்கிய ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் ரா. ஜெகதீசன் தெரிவித்துள்ளதாவது:
 மதுரையில் சங்க இலக்கிய ஆய்வு மையம் என்ற பெயரில் தமிழாய்வு நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
 செம்மொழி இலக்கியங்களின் தனிச்சிறப்புகளை எடுத்தியம்பும் வகையில், ஆண்டுதோறும் ஒரு செம்மொழி இலக்கியத்தைப் பல்வேறு அறிஞர்கள் பார்வையில் ஆய்வுசெய்து, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 மதுரை சங்க இலக்கிய ஆய்வுமையம், மதுரை பாத்திமா கல்லூரி தமிழ்த்துறையுடன்  இணைந்து, வரும் டிசம்பர் 11-ம் தேதி பரிபாடல் மற்றும் பதிற்றுப்பத்து பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கத்தை நடத்தவுள்ளது.
 இக்கருத்தரங்குக்கு பேராசிரியர்கள், ஆய்வாளர்களிடமிருந்து விதிமுறைக்கு உள்பட்டு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, 31.8.2010-க்குள் ஆய்வுக் கட்டுரைகளை முனைவர் ரா.ஜெகதீசன், சங்க இலக்கிய ஆய்வுமையம், 157, அழகர்கோவில் சாலை, தல்லாகுளம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
 மேலும், 98421-78721 என்ற எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது
jagadheesh_sangamlit@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்

 

0 comments: