அன்னை தெரசா நூற்றாண்டு விழா துவக்கம்

அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மேற்கு வங்கம், பரூய்ப்பூரில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் கோலாகலமாக துவங்கியது. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட கிறிஸ்தவ திருச்சபைகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழா தெற்கு 24-பர்கனாஸ் மாவட்டம், பரூய்ப்பூரில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் துவங்கியது. இதையொட்டி பரூய்ப்பூர் திருச்சபை தலைவர் பிஷப் சால்வடார் லோபோ தலைமையில் பிரமாண்ட துவக்க விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய லோபோ கூறியதாவது: அன்னை தெரசாவை போன்று, திருச்சபை ஊழியர்கள், பெண் துறவிகள், அவரின் மீது பற்று கொண்ட அனைவரும் உலக அமைதிக்காக பாடுபட வேண்டும். உலகத்தில் வன்முறையை ஒழிக்க அன்னையின் பாதையை பின்பற்றி அவர்கள் தூதர்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு லோபோ வலியுறுத்தினார்.
கடந்த 1968ம் ஆண்டு முதல் அன்னை தெரசாவை நன்கு அறிந்தவர் பிஷப் லோபோ. அன்னை தெரசாவால் அமைக்கப்பட்ட திருச்சபை விசாரணைக் குழுவிலும் அவர் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0 comments: