பள்ளி மாணவர்களுக்கு 1.35 லட்சம் "டிக்ஷனரி'

தேனி : அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் இலவச டிக்ஷனரிகள் நாளை வழங்கப்பட உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக., 27ல் வாழ்வியல் திறன் குறித்த ஒரு நாள் பயிற்சி, அனைத்து குறு வள மையங்களில் அளிக்கப்படுகிறது. இதற்காக, படைப்பாற்றல் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளின் மாணவர்களும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவிகள் 1,110 பேரும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் மாணவ, மாணவிகள் தலா 1,111 பேரும், சிறுபான்மை முஸ்லிம் மாணவ, மாணவிகள் தலா 555 பேர்களுமாக 4,444 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 540 பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் தயாரிக்கப்பட்ட டிக்ஷனரி இலவசமாக வழங்கப்படுகிறது.

 

0 comments: