ஜோதிடவியல் படிப்பு: பல்கலையில் துவக்கம்

மதுரை: அண்ணாமலை பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், இந்த கல்வியாண்டு முதல் ஜோதிடவியல் படிப்பு துவங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில், ஜோதிடவியல் டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில் பி.ஏ., - எம்.ஏ., ஜோதிடவியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. நேரடி பயிற்சி வகுப்புகள் அண்ணாமலை நகர், மதுரை, சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவிலில் உள்ள மையங்களில் நடத்தப்படுகின்றன. சேர விரும்பும் மாணவர்கள், அருகில் உள்ள தொலைநிலை கல்வி மையங்களையோ அல்லது ஒருங்கிணைப்பாளரை 94436 45685ல் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கல்வி இயக்குனர் நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

 

0 comments: