சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரிக்கு நட்சத்திர அந்தஸ்து

திருச்சி, ஜூலை.1: திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரிக்கு உயிரி தொழில்நுட்பத் துறையின் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கனகா பாஷ்யம் தெரிவித்திருப்பது:

"மத்திய அரசின் அறிவியல்- தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சார்ந்த உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கல்லூரிக்கு ரூ. 18 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது. மேலும், உயிரி அறிவியல் துறையில் நட்சத்திர அந்தஸ்தும் வழங்கி கெüரவித்துள்ளது.

இந்தக் கல்லூரியில் இளநிலையில் பயிற்றுவிக்கப்படும் விலங்கியல், தாவரவியல் போன்ற படிப்புகளைத் தொழில்நுட்ப ரீதியில் வளர்ப்பதற்கும், மாணவிகளை இந்தப் பாடத் திட்டத்தில் பயிற்சி அளித்து ஊக்குவிப்பதற்கும் இந்த மானியம் பெரும் உதவியாக இருக்கும் ' என்றார் கனகா பாஷ்யம்

 

0 comments: