தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

பெரம்பலூர், ஜூலை 7: பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


    விழாவுக்கு, ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வரதராஜன் தலைமை  வகித்தார். கல்லூரி முதல்வர் ஆர்.டி. உதயக்குமார், ரோவர் பொறியியல் கல்லூரி  முதல்வர் வி. மாரியப்பன், பெரம்பலூர் நகராட்சித் துணைத் தலைவர் கி. முகுந்தன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கிவைத்து, நகராட்சித் தலைவர்  எம்.என். ராஜா பேசியது:

     மாணவ, மாணவிகள் பன்முகத் தன்மையோடு இருக்க வேண்டும். மாணவர்கள்,  சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

    இந்நிகழ்ச்சியில், கல்லூரி டீன் ஆர். கண்ணன், சசிக்குமார், துணை முதல்வர்  ராஜசேகர், நிர்வாக அலுவலர் சிவக்குமார், ரோவர் டெக்னாலஜி கல்லூரி துணை  முதல்வர் பாலமுருகன், தொழில்நுட்பக் கல்லூரியின் அலுவலக மேலாளர்  ஆர். கண்ணன், துறைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாரயணசாமி, சுப்புராஜ், சுப்பிரமணியன், அருண்பிரசாத், சுபா, ராதா, ரோவர் கல்வி நிறுவனங்களின் மக்கள்  தொடர்பு அலுவலர்கள் ராஜு, சேகர், கணினித் துறைத் தலைவர் மேரி அனிதா  உள்ளிட்ட முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் எ. ராமலிங்கம் வரவேற்றார். துறைத் தலைவர் ஆர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்

 

0 comments: