சாரதா மகளிர் கல்லூரியில்ஆங்கிலப் புலமை பயிற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் ஆங்கில புலமை குறித்த மூன்று பயிற்சி நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று கல்லூரியில் நடந்தது.கல்லூரி தாளாளர் சிவசுப்ரமணியன் ஆங்கில புலமை பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:உலகத்தையும் உங்களையும் இணைக்கிற மொழி ஆங்கிலம். பாலம் எவ்வாறு இரண்டு இடங்களை இணைக்க உதவுகிறதோ அதேபோல் ஆங்கிலமும் உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிறது. மாணவிகள் அனைவரும் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்.தினந்தோறும் ஒவ்வொருவரும் ஐந்து ஆங்கில வார்த்தையை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது என்பது கடினமானது அல்ல.ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசி பாருங்கள். விரைவில் நீங்களும் பேச முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், டாக்டர் ஜெயச்சந்திரன், ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, கல்லூரி முதல்வர் ராஜசேரகன் உட்பட பலர் பேசினார்.ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், ராஜலெட்சுமி, சுமிதா, விஜயலெட்சுமி, தனபாக்கியலெட்சுமி, ஹேமாதேவி மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். பேராசிரியர் ராஜலெட்சுமி வரவேற்றார். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

0 comments: