மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம்

பெரம்பலூர், ஜூலை 7: பெரம்பலூர் பனிமலர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பெரம்பலூர்  அரிமா சங்கம் மற்றும் 007 டிஜிட்டல் கலர் லேப் சார்பில், வானம் வசப்படும் எனும் தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, அரிமா சங்கத் தலைவர் ஆர். குருராஜ் தலைமை வகித்தார்.  பனிமலர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆ. கலியபெருமாள், அரிமா சங்க சாசனத் தலைவர் மு. ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சொற்பொழிவாளர் சுகி. சிவம், மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வை   எவ்வாறு எழுதுவது என்பது குறித்தும், அதை எதிர் நோக்கும் வழிமுறைகள் குறித்தும்  விளக்கிப் பேசினார்.

   இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட இயக்குநர் எஸ். அண்ணாமலை பிரேம்குமார், பயிற்சியாளர் எஸ். சந்திரசேகர்தவே, பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர்  க. பெரியசாமி, அரிமா சங்க மாவட்ட அவைச் செயலர் எச்.ஷேக்தாவூத், பனிமலர் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். வெங்கட்ராமன், உதவி தலைமை ஆசிரியர்  கோபாலகிருஷ்ணன்,  அரிவையர் சங்கத் தலைவர் ஏ. கமலா, லியோ சங்கத் தலைவர்  வி. பாலசுப்பிரமணி, செயலர்கள் இரா. ராஜு, ஜி. நளினி, ஆர். தலமலை, பொருளாளர்கள் ஜி.என். ஒஜீர், எம். சங்கீதா, வி. அந்தோனி சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பனிமலர்  மற்றும் மெüலானா மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, அரிமா சங்க மண்டலத் தலைவர் மு. இமயவரம்பன் வரவேற்றார்.  மெüலானா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. அன்னூர் பாட்ஷா நன்றி  கூறினார்

 

1 comments:

Sathosh said...

Yes,Self-Confidence is very important in our day to day life.. I agree to the above said facts. For more information about astrology. Log on to http://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that 'jaamakkol astrology software' has been introduced only by this website.