இன்று சர்வதேச அகிம்சை தினம் !

நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். அவரது பிறந்த தினமான அக்., 2ம் தேதி, ஐ.நா., அமைப்பால் "சர்வதேச அகிம்சை தினமாக' அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், வன்முறையற்ற வாழ்க்கை போன்றவற்றின் முக்கியத் துவத்தை மக்களுக்கு உணர்த்து வதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அகிம்சை: சுவாமி விவேகானந்தர், ரமண மகரிஷி, சுவாமி சிவானந்தா போன்றவர்கள் அகிம்சையின் வழிமுறையை மக்களுக்கு போதித்தனர். தங்களது உரிமைகளை, கோரிக்கைகளை, உணர்வுகளை வன்முறை வழியில் நடத்தாமல் அறவழியில் செல்வதே அகிம்சை. இதனால் யாருக்கும் துன்பமோ, காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படக்கூடாது என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.

உலகிற்கு வழிகாட்டி: இத்தகைய சக்தி மிக்க அகிம்சா போராட்டத்தை தான் மகாத்மா காந்தி, இந்திய அரசியலில் மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். மேலும் அகிம்சை வழியில் போராடிய முதல் தலைவர் என்ற பெருமையும் பெற்றார். அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா, தன்னை கவர்ந்த தலைவர் என கூறியது மகாத்மா காந்தியை தான். மேலும் மகாத்மா பின்பற்றிய அகிம்சை முறை தான் தற்போதைய உலகுக்கு அவசியம் என்றும் ஒபாமா வலியுறுத் துகிறார். இத்தகைய உன்னதமான அகிம்சையை உலகுக்கு எடுத்துக் காட்டிய மகாத்மாவின் வழியை இன்று முதல் அனைவரும் பின்பற்ற இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

 

2 comments:

eraeravi said...

nandru.nandri
www.eraeravi.com

Anonymous said...

அகிம்சா மூர்த்தி தோன்றிய தேசதில் இன்று கொலைவெறி ஆட்சி. அகிம்சை தினததை இந்தியா கொண்டாட என்ன அருகதையுள்ளது? அந்த தாததாவையே அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.