"டோபல்' தேர்வு எழுதியோர் எண்ணிக்கை உயர்வு

சென்னை : ஆங்கில மொழி அறிவை சோதிப்பதற்கான "டோபல்' தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, இரண்டு கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

"டோபல்' தேர்வை உருவாக்கிய எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (இ.டி.எஸ்.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "டோபல்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, மொத்தம் இரண்டு கோடியே 50 லட்சம் பேர் "டோபல்' ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதியுள்ளனர். உலகளவில் இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. "டோபல்' தேர்வு (டெஸ்ட் ஆப் இங்கிலிஷ் அஸ் பாரின் லாங்வேஜ்), பல்கலைக்கழக அளவில் மாணவரின் ஆங்கில மொழி புரிதல் திறனை ஆய்வு செய்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவது இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உட்பட 130 நாடுகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் 7,500 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், "டோபல்' தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளன. மொத்தம் 165 நாடுகளில் 4,500 தேர்வு மையங்களில், "டோபல்' தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு பேப்பர் பேஸ்டு, இன்டர்நெட் பேஸ்டு என இரு முறைகளில் நடத்தப்படுகிறது. "டோபல்' தேர்வுக்கான பாடங்கள், இலவச மாதிரித் தேர்வுகள், வினாத்தாள்கள், வீடியோக்கள் ஆகியன 'www.toeflgoanywhere.org' என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0 comments: