இந்திய விமானப்படையில்மாணவர்களுக்கு வாய்ப்பு

ஈரோடு: இந்திய விமான படையில், குரூப்-ஐந்து "டெக்னிக்கல் டிரேட்'களில் படை வீரராக பணிபுரிய விரும்பும், மாணவர்கள் வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள், இந்திய விமானப்படையில், குரூப்-ஐந்து, "டெக்னிக்கல் டிரேட்'களில் படைவீரராக சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எஸ்.எஸ்.எல்.ஸி., முடித்த பின், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் ப்ளஸ் 2 தேர்வில் 50 சதவீதம் மார்க்குடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1990 ஏப்ரல் முதல் 1994 மேக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில், மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுகளில் படித்து 50 சதவீதம் மார்க் பெற்றவர்களும் விண்ணப்பிக்காலம்.இப்பணிக்கான விண்ணப்பங்கள், நவம்பர் 8ம் தேதிக்குள், "சென்ட்ரல் ஏர்மென் செலக்ஷன் போர்டு, போஸ்ட் பாக்ஸ் எண் 11807, புதுடில்லி 110 010' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விளம்பரம், வேலைவாய்ப்பு, பாடத்திட்டம், மாதிரி வினாக்கள், தேசிய அளவிலான தேர்ச்சி பட்டியல் மற்றும் சேர்க்கை பட்டியல் ஆகியவற்றை பார்க்க, "டபுள்யுடபுள்யுடபுள்யு.இந்தியன்ஏர்ஃபோர்ஸ். நிக்.இன்' என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். 044 227 918 53 என்ற ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

0 comments: