புத்தாக்க அறிவியல் விருது பெற படைப்பாளி மாணவர்கள் தேர்வு

விருதுநகர் : பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் விருது வழங்க, அறிவியல் படைப்பாளி மாணவர்களை அறிவியல் தொழில்நுட்ப மையம் தேர்வு செய்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மத்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளி மாணவர்களில் அறிவியல் படைப்புகளை உருவாக்குபவர்களை தேர்வு செய்து வருகிறது. தேர்வு பெற்ற மாணவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிய படைப்புகளை செய்யும் மாணவர்கள் ஒவ்வொருக்கும் 5,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இந்த பணத்தால் ஒரு மாத காலத்திற்குள், புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்க வேண்டும். பின்னர் அந்த படைப்புகள் அனைத்தும் கண்காட்சியில் இடம் பெறும். இதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். அதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் தேசிய போட்டிகளில் பங்கு பெறுவர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு "புத்தாக்க அறிவியல் விருது' வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இந்த விருதுக்கான படைப்புகளை செய்ய 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

0 comments: