"சுகாதாரமும் சுற்றுச்சூழலும்'மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ஊட்டி:நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) சார்பில், ஊட்டியிலுள்ள ஓம் பிரகாஷ் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, "சுகாதாரமும் சுற்றுச்சூழலும்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தலைமை ஆசிரியர் வசந்தி பேசுகையில், ""சுகாதாரம், சுற்றுச்சூழலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுகாதார சீர்கேடால்தான் பல நோய்கள் பரவுகின்றன. இவற்றை தவிர்க்க, சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றார்."நெஸ்ட்' அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""இந்திரா நகர், பெரியார் காலனி, கஸ்தூரிபா காலனி, குருசடி காலனி, காந்தல் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல குழந்தைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதால், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறியாமல் உள்ளனர். அதிகமாக மழை பெய்யும் போது, நீர் வழிந்தோடும் கால்வாய்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். திடக் கழிவு மேலாண்மை, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.

 

0 comments: