அறிவியல் திறனை தூண்டும் "இன்ஸ்பைர்' கண்காட்சி

http://img.dinamalar.com/data/large/large_111834.jpg

கோவை: பள்ளி மாணவ மாணவியரின் அறிவியல் திறனை ஊக்குவிக்க வழங்கப்படும் "இன்ஸ் பைர்' விருதுக்கான கண்காட்சி, கோவை சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங் கியது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த "இன்ஸ்பையர்' விருது வழங்கப்படுகிறது. 2009-2010ம் ஆண்டுக்கான இந்த விருது, கடந்த மாதம் 404 மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது.
விருது தொகை 5,000 ரூபாயை பயன்படுத்தி தேர்வு பெற்ற மாணவர்கள் அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புக்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படும். கோவை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 404 மாணவ மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி, கோவை சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி சிக்கனம், கழிவு நீர் சுத்திகரிப்பு, சாணத்தில் இருந்து எரிவாயு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புக்களை மாணவ மாணவியர் காட்சிக்கு வைத்திருந்தனர்.
சிறந்த அறிவியல் படைப்புக்காக தேர்வு செய்யப்படும் 20 பேர் போட்டி நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது.

 

0 comments: