தொலைத்தொடர்பு சேவை : டிஜிட்டலாக்க "டிராய்' இலக்கு

புதுடில்லி : தொலைத்தொடர்பு சேவை முழுவதையும், டிஜிட்டல் மயமாக்கும் தீவிர முயற்சியில், "டிராய்' ஈடுபட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு ÷ சவையை டிஜிட்டல்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(டிராய்) தலைவர் ஜே.எஸ். சர்மா நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 2013ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் டிஜிட்டல் சேவை கொண்டு சேர்க்கப்படும். ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும். டிஜிட்டல் மயமாவதன் மூலம் இந்த சேவையானது வெளிப்படையாக இருக்கும். இதற்கு தொலைத்தொடர்பு துறை முழு ஆதரவை அளிக்கும்.

டிஜிட்டல் மயமாக்குவதற்கு நேரடி அன்னிய முதலீடு 74 சதவீதத்திற்கு டிராய் அனுமதியளித்தது. கேபிள் "டிவி'யை பொருத்தமட்டில் 26 சதவீதமும், மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களில், 74 சதவீதம் இருந்தால் போதுமானது என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் டிஜிட்டல்மயமாக்குவது விரைவில் சாத்தியமாகும். பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துவதில் கேபிள் தொழில் முழுமையாக பயன்படுத்தப்படும். டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் பல்வேறுவிதமான யுத்திகளை கடைபிடிக்க, "டிராய்' ஆலோசனைகளை வழங்கியுள்ளது. வரி விதிப்பில் சலுகை, அன்னிய நேரடி முதலீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளோம். ஆனால், அது இன்னும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு சர்மா கூறினார்.

 

0 comments: