வேலைவாய்பு பதிவு முறை: மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய சலுகை

தூத்துக்குடி, மாற்றுத்திறனாளிகள் இனிமேல் ஒரு முறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதும். ரினீவல் எதுவும் செய்ய வேண்டாம். இது சம்பந்தமாக விரைவில் அரசாணை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதி மிக அ திக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எல்லா மாற்றுதிறனாளிகளுக்கும் அரசின் சலுகை கிடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது.முதல்வரின் துறையின் கீழ் மாற்றுதிறனாளிகள் துறை கொண்டு வரப்பட்டு விட்டதால் அவர்களுக்கு என்று ஏதாவது சலுகைகளுக்கான அறிவிப்பு முதல்வரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு முதல் பல்வே று சலுகைகள் தொடர்ச்சியாக வருவதால் மாற்றுதிறனாளிகள் மத்தியில் கடும் மகிழ்ச்சி உருவாகி இருக்கிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை எந்த காரணம் கொண்டும் அலைய வைக்க கூடாது என்று அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு முறை பதிவு செய்தால் போதும். ரினிவலுக்கு வர வழைக்க வேண்டாம். ஒரு முறை அவர்கள் பதிவு செய்து விட்டால் போதும். அவர்கள் பதிவு அப்படியே இருக்கும் வகையில் செய்ய அரசு தீவிர பரிசீலீனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் இது சம்பந்தமாக அரசு ஆணை வெளியாக உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே கண் தெரியாதோர், காது கேளாதோருக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்தால் போதும். ரினிவல் செய்ய வேண்டாம் என்கிற உத்தரவு 1986ம் ஆண்டு முதல் நø டமுறையில் உள்ளது. அதனை பின்பற்றி மாற்று திறனாளிகள் அனைவருக்கும் இனிமேல் ஒரு முறை வே லைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதும். ரினிவல் செய்ய வேண்டாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டு அரசாணையாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

0 comments: