பயோஇன்பர்மேடிக்ஸ் துறையில் வேலை வாய்ப்பு அதிகம்: விஞ்ஞானி தகவல்

மதுரை: " ஆய்வு பணி மேற்கொள்பவர்களுக்கு பயோஇன்பர்மேடிக்குஸ் துறை தகவல் களஞ்சியமாக உள்ளதால், இத்துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது,'' என இந்திய அறிவியல் கழக விஞ்ஞானி கே.சேகர் கூறினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில், ""பயோஇன்பர்மேடிக்ஸ்'' குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் அவர் பேசியதாவது: நம் உடம்பில் புரதங்களின் கூட்டமைப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் உள்ளது. முக்கியமாக உடம்பின் கட்டமைப்பில் இன்சுலின், ஹீமோகுளோபின் குறைபாடு குறித்து பயோஇன்பர்மேடிக்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். புரதங்களின் கட்டமைப்பு குறித்து தெளிவு கிடைப்பதன் மூலம் நோயின் வீரியத்தை குறைக்க முடியும். புற்றுநோய், மூட்டுவலி, ஹெச்.ஐ.வி, ஆஸ்துமா, மறதி, சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், மலேரியா, போன்ற நோய்களுக்கு காரணமான புரதங்களின் கட்டமைப்பை கண்டுபிடித்து கட்டுப்படுத்த முடியும். இதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்து வடிவமைக்க முடியும் என்பதால், இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மூலக்கூறை கண்டுபிடிப்பதே சிரமான விஷயம். இந்திய அறிவியல் கழகத்தின் புரத தகவல் களஞ்சியம் இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்கிறது என்றார்.
துறைத் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். பேராசிரியர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

 

0 comments: