திருச்செந்தூர் கோவில் "லோகோ'வுடன் தங்க நாணயம் வெளியிட ஏற்பாடு

தூத்துக்குடி : கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவில் "லோகோ'வுடன் கூடிய தங்க நாணயம் வெளியிட ஏற்õடுகள் நடந்து வருகின்றன. தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட புகழ் பெற்ற ஆன்மிக தலங்களுக்கான தங்க நாணயத்தை, ஸ்டேட் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில், நவ., 6ம் தேதி துவங்கும் கந்த சஷ்டியையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோவில் "லோகோ'வுடன் கூடிய தங்க நாணயத்தை வெளியிட, ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அந்த நாணயத்தின் ஒருபுறம் ஸ்டேட் வங்கி லோகோவும், மறுபுறம் திருச்செந்தூர் கோவில் லோகோவும் இருக்கும். இரண்டு கிராம், ஐந்து கிராம் எடை கொண்ட அந்த தங்க நாணயங்கள், சஷ்டியின் போது பூஜையில் வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும்.


இந்த நாணயத்தை வெளியிடுவது தொடர்பாக, அதற்கான அனுமதி வேண்டி, கோவில் நிர்வாகம் சார்பில், அறநிலையத்துறை கமிஷனருக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் தேவதாச சுந்தரம் நேற்று தெரிவித்தார். இணை ஆணையர் பாஸ்கரன் உடனிருந்தார்.

 

0 comments: