இந்திய மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங்

சென்னை : இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் நேரடி விண்ணப்பக் கவுன்சிலிங், 29ம் தேதி நடக்கிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இரண்டரை ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பிற்கு நடந்த முதற்கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் உள்ள காலியிடங்களுக்கு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடி விண்ணப்பக் கவுன்சிலிங்கும் 29ம் தேதி நடக்கிறது.

சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் இக்கவுன்சிலிங் நடைபெறும். நர்சிங் தெரபிஸ்ட் படிப்பிற்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் படிப்பிற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாõம். மேலும் விவரங்களை, http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: