நாகரிக உலகத்திற்கு பயங்கரவாதம் அபாயம் : பிரதிபா பாட்டீல்

புதுடில்லி : தற்கால நாகரிக உலகிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக விளங்குவதாக, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்தார். தேசிய ராணுவக் கல்லூரி (என்.டி.சி.,) யின் பொன்விழா நிகழ்ச்சியின் துவக்க விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசியதாவது: பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், பயங்கரவாதிகள் அப்பாவிகளை கொல்வதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிப்படுத்தியது. பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய, உலகம் முழுவதும் பரவியிருக்கிற பயங்கரவாதம் தான், இன்று <உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். அதை சர்வதேச சமூகம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

 

0 comments: