வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் அக்., 23ல் புதுக்கோட்டையில் துவக்கம்

நாமக்கல்: "வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அக்டோபர் 23ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது' என, நிர்வாக இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பதிவு செய்தவர்கள் ஏராளமானோர் டாக்டர்கள், இன்ஜினியர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், உடலுழைப்பாளர்கள், எலக்ட்ரீசியன்கள் என வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்வதால் பயனாளிகளுக்கு ஏற்படும் பயணம், நேரம் மற்றும் செலவினத்தை தவிர்க்கும் வகையில், வெளிநாடு செல்ல விரும்பும் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை அக்டோர் 23ம் தேதி மற்றும் 24ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில், தமிழகத்தில் உள்ள இதர மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். அதில் பங்கேற்று பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் 4 ஃபோட்டோவுடன் வரவேண்டும்.
அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும் முறையான கல்வித்தகுதி இல்லாமல் அனுபவம் மட்டும் உள்ளவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்யலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், தச்சர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர், ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் (கலை அறிவியல் மற்றும் வணிகம்) 442 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், நர்சிங், பாராமெடிக்கல் டெக்னிசியன்கள் மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்கள், இன்ஜினியர்கள், முதல் நிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலைப் பட்டதாரிகள், முதுநிலை வேளாண் படித்தவரகள் (எம்.பி.ஏ.,), கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு படித்தவர்கள் 772 ரூபாயும், மருத்துவர்கள் 995 ரூபாயும் சிறப்பு பதிவு முகாமில் செலுத்தி விண்ணப்பம் பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

0 comments: