பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகளுக்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு  துவங்கியது. சுமார் 46,000 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங் களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த 1 மாதமாக நடந்து வருகிறது. 2 கட்ட கவுன்சிலிங் முடிந்து விட்டது. 

3-வது கட்ட கவுன்சிங் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கு 46 ஆயிரம் மாணவர்- மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வருகிற 10-ந் தேதி கவுன்சிலிங் முடிகிறது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில் அழைப்பு அனுப்பப்பட்ட தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே இந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக 28 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதது. இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தற்போது நடந்து வரும் 3-வது கட்ட கவுன்சிலிங் முடிந்ததும் 

 

0 comments: