மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் விதிவிலக்கு


மதுரை: அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைகளில் படிக்கும் மாற்று திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்விகக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல தற்போது தனிக்கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்கலை, அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டம், பட்ட மேற்படிப்பு படிக்கும் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தனிக்கட்டணம் செலுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. படிப்பு உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை, சட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், சுயவேலை வாய்ப்பு திட்டங்கள், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை ஆகிய திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது,என கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

0 comments: